ராமநாதபுரம் : ராமநாதபுரம் சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மறை மாவட்ட அதிபர் ராஜமாணிக்கம், உதவி பாதிரியார் ஜான்பிரிட்டோ கொடி ஏற்றி, திருப்பலி நடத்தினர். ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு மறையுரை சிந்தனைகள், திருப்பலி நடக்கிறது. டிச., 2 மாலை 6:00 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.