லாலாப்பேட்டை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை பகுதியில், தீபவிளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் யூனியன், கள்ளபள்ளி பஞ்சாயத்து கொடிக்கால்தெருவில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, தீப விளக்கு தயாரிப்பில், இப்பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்கப்படுகிறது. லாலாப்பேட்டையில் பிரதிவாரம் நடைபெறும் புதன்கிழமை சந்தையில் விற்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளுக்கு விளக்கு தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.