தஞ்சாவூர்- திருச்சி சாலையில், சுமார் 12 கி.மீட்டர் தொலைவில் உள்ளது வல்லம். இங்குள்ள கவுரி அம்மன், தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள். திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் இவளுக்குப் புடவை சாத்தி, திருப்பாதத்தில் குண்டு மஞ்சள் வைத்து வணங்கி, பின்னர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் பூசிக்குளித்து வர திருமணம் விரைவில் நல்லமுறையில் நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், எலுமிச்சம்பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து வணங்கி, அதன் சாறைக் குடித்துவர புத்திர பாக்யம் உண்டாகும்.