மதுரை மாவட்டம்,சோழவந்தானுக்கு அருகில் உள்ள திருவேடகம், திரு ஏடநாதர் கோயிலில் அருள்கிறாள் வாராஹிதேவி. இந்த அன்னையை தேய்பிறை பஞ்சமியன்று எருமைப்பால், சிவப்பு ஆடை, செவ்வரளி மலர் மற்றும் பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு வகைகள் கொண்டு வழிபட்டால் தேவி நம் குறைகளைப் போக்கி அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.