சரநாராயண பெருமாள் கோவில் ராஜகோபுர வாசற்கால் பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2014 12:11
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ராஜகோபுரத்திற்கான கருங்கல் வாசற்கால் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் 62 அடி உயரத்தில் 5 நிலை ராஜகோபுரம் 1.5 கோடி ரூபாய் மதிப்பி லும், 26 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள், 34 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த தை மாதம் பாலாலயம் நடந்தது. அதன்பின் ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கோவிலின் ராஜகோபுரத்திற்கான 20 அடி உ யரம் கொண்ட கருங்கல் வாசற்கால் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அமைச்சர் சம்பத், நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம், நகர செயலர் முரு கன், திருப்பணிக்குழுத் தலைவர் தணிகாச்சலம், அ.தி.மு.க., தொகுதி செயலர் ராமசாமி, ஒன்றிய செயலர் கந்தன், அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் சுந்தரிமுருகன், துணைச் சேர்மன் சம்மந்தம், பி.டி.ஓ., துரைசாமி, கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.