பதிவு செய்த நாள்
28
நவ
2014
01:11
பவானி: பவானி, காடையம்பட்டியில் உள்ள மஹா மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.பவானி, ஆண்டிகுளம் கிராமம், காடையம்பட்டியில் உள்ள மஹாகணபதி, அமிர்தலிங்கேஷ்வரர், மஹாமாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா, கடந்த, 25ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.பின்னர், கூடுதுறையில் இருந்து, புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, முதல் கால யாக வேள்வி துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாகபூஜை துவங்கி, அதிகாலை, 5.30 மணிக்கு மேல் பத்ரகாளியம்மனுக்கும், காலை, பத்து மணிக்கு மேல் மஹா மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. குமாரபாளையம் கோபாலகிருஷ்ண சுவாமிகள், ஸ்ரீராம் தலைமையிலான குழுவினர், கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர். இரண்டு கோவிலில் உள்ள அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர்கவுண்டர்களான ராமசாமி, சரவணன், ஊர் கொத்துக்காரர் பாலு, ஊர்தச்சு வேலைக்காரர் முத்துவேல் மற்றும் பலர் செய்திருந்தனர்.பவானி எம்.எல்.ஏ., நாராயணன், பவானி யூனியன் தலைவர் ரவி, பவானி சொசைட்டி தலைவர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.