சங்கராபுரம்: காட்டுவனஞ்சூரில் சம்வத்ஸரா அபிஷேக விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் கடந்தாண்டு ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. நேற்று முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சம்வத்ஸரா அபிஷேகம் நடந்தது. காலை கோ பூஜை, மகா சாந்தி ஹோமம் மற்றும் மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. இதில் வெங்கடேச பாகவதர், நடராஜய்யர், சீனு அய்யர், அன்பழகன், எழிலரசன், பழமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.