பதிவு செய்த நாள்
01
டிச
2014
02:12
பாகூர்: பாகூர் வசந்தம் திருமண நிலையத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள, 12 ஜோதி லிங்கங்களின் தரிசன நிகழ்ச்சி நடந்தது. பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேதுராமன் தலைமை தாங்கினார். பிரம்மா குமாரிகள் புதுச்சேரி பொறுப்பாளர் கவிதா வரவேற்றார். இரண்டு நாட்கள் நடந்த ஜோதி லிங்கம் தரிசன நிகழ்ச்சியில், குஜராத்தில் உள்ள சோமநாத் லிங்கம், ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள 12 ஜோதி லிங்கங்களின் மாதிரி வடிவங்கள், பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. மேலும், ஆத்மா, பரமாத்மா இவ்வுலக நாடகம் பற்றிய கண்காட்சி, மனம், உடல் ஆரோக்கியத்திற்கான இலவச தியானப் பயிற்சி, சத்தியத்தின் குரல் என்ற தலைப்பில் வீடியோ காட்சி திரையிரடப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஜோதி லிங்கங்களை வழிபட்டனர்.