வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்ச தீப விழா டிச., 10 ல் நடைபெற உள்ளது. வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் 2006 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயில் விழா குழுவினர், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்திகை மாதத்தில் லட்ச தீப விழாவை நடத்த முடிவானது. கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தின் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் லட்ச தீப விழா நடந்து வருகிறது. 9 வது ஆண்டாக வரும் டிச.10 ல் லட்ச தீப விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் அறக்கட்டளையினரும், கோயில் தக்கார் வேல்முருகன், செயல் அலுவலர் வேலுச்சாமி செய்து வருகின்றனர்.