பாகூர்: சேலியமேடு ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், 20ம் ஆண்டு மகா சங்காபிஷேக விழா இன்று (1ம் தேதி) நடக்கிறது. பாகூர் அடுத்துள்ள சேலியமேடு கிராமத்தில், திருமுறைநாயகி உடனுறை ஜோதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 20ம் ஆண்டு 108 மகா சங்காபிஷேக விழா இன்று (1ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு, மாலை 4.00 மணிக்கு யாக சாலை வழிபாடு துவங்குகிறது. தொடர்ந்து, பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை 6.30 மணிக்கு 108 மகா சங்காபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருமுறை வழிபாட்டுக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.