நாகர்கோவில் : கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச. ஒன்றாம் தேதி எட்டாம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு கூட்டுத்திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. தேருக்கு பின்னால் மெழுகுவர்த்தி, உப்பு, மிளகு போன்றவை காணிக்கை அளித்து தரையில் விழுந்து கும்பிடும் கும்பிடு நமஸ்காரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. டிச.,இரண்டாம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு ஆயர் பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது, தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்பவனி நடைபெறும். 3-ம் தேதி நிறைவு நாளையொட்டி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.