பட்டுக்கோட்டை அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில், வயல்வெளியில் எமதர்மராஜாவுக்கு தனி கோயில் கட்டி வழிபாடு செய்கிறார்கள். எருமை வாகனத்தில் எமன் தனி மூலஸ்தானத்தில் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவர் வலக்கரத்தில் பாசக்கயிறும், சூலாயுதமும், இடக்கரத்தில் கதையும், ஓலைச்சுவடியும் ஏந்தியுள்ளார். கீழே காவல் தூதுவர்களாக சித்திரனும், புத்திரனும் அமர்ந்துள்ளனர். பணம், பொருளைப் பறிகொடுத்தவர்கள், பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், மனதால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு பலனடைகிறார்கள்.