சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகே உள்ள கோடாங்கிப்பட்டி, உருளி, மாங்குடி, தெற்குவாடி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அரவானை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் மூங்கில் கம்புகளில் பட்டுத் துணியால் போர்த்தப்பட்ட குடையைத்தான் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். மழை வேண்டியும், விளைச்சல் பெருகவும், குழந்தை பேறுக்காகவும் இந்தக் குடை காணிக்கை செலுத்தப்படுகிறது. குடையைப் புனிதமாகக் கருதுவதால், மழை, வெயிலுக்குக்கூட இவர்கள் குடையைப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் விசேஷம்.