சிவகங்கை மாவட்டம், பிள்ளைக்காளி கோயிலில் ஆனி மாதம் கடைசி வெள்ளியில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது பனை ஓலைக் குருத்தால் செய்யப்பட்ட தேரில் அம்மனை வீற்றிருக்கச் செய்து, அதை இரண்டு காளைகள் இழுத்து வருவது முக்கிய நிகழ்வாகும். பிள்ளைப் பேறு இல்லாத பெண்கள் இந்த அம்பாளை வணங்க அக்கறை நீங்குவதாக ஐதீகம்.