ராஜபாளையம் : யோகாசனம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட, ராஜபாளையம் சின்மயா பள்ளி மாணவர் ராகுல், தீபங்களுடன் யோகாசனம் செய்தார். பாதவிரிச்சி ஆசனம் செய்த இவரது உடலில் தீபங்களுடன் வைக்கப்பட்டது. பதஞ்சலி யோகா மைய தலைமை பயிற்சியாளர் நீராத்திலிங்கம் கூறுகையில், “யோகாசனம் அற்புற கலை. வயது வித்தியாசமின்றி முறைப்படி யோகா கற்று, நோயின்றி வாழலாம். யோகாசனம் செய்யும் மாணவர்களுக்கு கவனம் சிதறாமையுடன் கற்கும் திறனும் அதிகரிக்கும். மாணவர்களிடையே யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட கார்த்திகை தீபநாளில் இந்த நிகழ்ச்சி நடத்துகிறோம்,” என்றார்.