அவிநாசி : அவிநாசி அருகே ராக்கியாபாளையம், மகாலட்சுமி நகரில் உள்ள அகிலாண்ட ஈஸ்வரி ஓம் சக்தி சிவசக்தி நாகம்மாள் கோவிலில், 12ம் ஆண்டு பொங்கல், திருவிளக்கு பூஜை திருவிழா நேற்று நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு தீர்த்தம், படைக்கலம் எடுத்தல் ஆகியன நடந்தது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு பெண்கள் விளக்கு மாவு எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின், திருக்கல்யாணம், உச்சி பூஜை, பூவோடு எடுத்தல், திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராக்கியாபாளையம், தேவராயன்பாளையம், உமையஞ்செட்டிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.