ஆழ்வார் திருப்பணியில் ஈடுபட்ட ஆந்திராவின் சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு சென்னையில் நடக்கிறது. வைணவ சமூகத்தை உலகெங்கிலும் பரவச் செய்த வைணவ குரு சின்ன ஜீயர் சுவாமிகள், ஆழ்வார்கள் பாடிய தமிழ் வேதமான நாலாயிர திவ்விய பிரபந்தத்தை தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிட்டு, ஆழ்வார்களின் தமிழ் பணியையும், ஆலயப் பணியையும், தேசியப் பணியையும் உலகறியச் செய்தவர். அவர், வரும் 7ம் தேதி வரையில், காலையில், சென்னை கோயம்பேட்டிலும், மாலையில், பூக்கடையிலும், தமிழில் ஆன்மிக சொற்பொழிவாற்றுவார் என, ஜீயர் கல்வி அறக் கட்டளை தெரிவித்துள்ளது.