சென்னை: கலைத்துறையில் சேவையாற்றி வரும் ”லஷ்மன் ஸ்ருதி மியுசிக்கல்ஸ்” நிறுவனம் சென்னையில் திருவையாறு இசை விழாவை வருடந்தோறும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு இந்த இசைவிழாவிற்கு வயது பத்து. ஓர் அற்புத இசைச் சங்கமமான ”சென்னையில் திருவையாறு” இவ்வருடம் வருகிற டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருவிழா ஜெய்சங்கரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு பி.எ.ஸ்.நாராயணசாமி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாக சேர்ந்து பாடுகின்றனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜெ அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இசை விழாவை தொடங்கி வைக்கின்றார். இரவு 7.30 மணிக்கு வயலின் கலைஞர்கள் கணேஷ் குமரேஷ் இருவரது வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
19ம் தேதி முதல் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7.00 மணிக்கு துவங்கி இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
18/12/14: மாலை 3 மணி: திருவிழா ஜெய்சங்கர்- நாதஸ்வரம்; மாலை 5 மணி: பிஎஸ்.நராராயணசாமி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்; மாலை 6 மணி: சென்னையில் திருவையாறு 10வது ஆண்டு இசைவிழாவை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். இரவு 07:30 மணிக்கு கணேஷ் குமரேஷ்- வயலின்.
19/12/14: காலை 7 மணி: உடையாளூர் கல்யாணராமன்- நாமசங்கீர்த்தனம்; 9 மணி: நர்மதா- வயலின்; 10:30 மணி: ஷோபனா ரமேஷ்- பரதநாட்டியம்; மதியம் 1 மணி: சங்கரி கிருஷ்ணன்- வாய்பாட்டு; 02:45 மணி: கர்நாட்டிகா சகோதரர்கள் மற்றும் துஷ்யந்த் ஸ்ரீதர்- சங்கீத உபன்யாசம் ( சீனிவாச கல்யாணம்); மாலை 04:45 மணி: ப்ரியா சகோதரிகள்- வாய்பாட்டு; இரவு 07:30 மணி: ராஜேஷ் வைத்யா- வீணை.