திருப்பதி: திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க தர்ம தரிசன பக்தர்கள் நேற்று 14 மணி நேரம் காத்திருந்தனர்.நேற்று காலை முதல், பாத யாத்திரை பக்தர்களின் தரிசனம் மற்றும் ’கரன்ட் புக்கிங்’ கீழ் வழங்கப்படும் 300 ரூபாய் விரைவு தரிசனம் டிக்கெட்களை, தேவஸ்தானம் ரத்து செய்தது. அதிகாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 35 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசித்தனர். தர்ம தரிசன பக்தர்கள் 28 காத்திருப்பு அறைகளில் காத்திருந்தனர்.