பதிவு செய்த நாள்
08
டிச
2014
05:12
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகள் உள்ளன. மனிதனிடம் மெய்(உடல்), வாய், கண், மூக்கு, காது என்னும் ஐந்து முக்கிய உறுப்புகள் உள்ளன, இவற்றில் ஆணவம் (அகங்காரம்), கன்மம் (நமது செயல்களால் சேர்ந்த பாவ, புண்ணியம்), மாயை (உலக வாழ்வு உண்மையானது என்ற எண்ணம்) என்ற மூன்று குணங்கள் இருக்கின்றன. இது தவிர ஞானம் (அறிவு)அஞ்ஞானம் (அறிவின்மை) என்ற தன்மைகளும் உள்ளன. இந்த பத்தும் பத்துப் படிகளைக் குறிக்கிறது. இதுதவிர மண், பெண், பொன் உள்ளிட்ட எட்டு வகை ஆசைகள் இருக்கின்றன. இவையெல்லாம் உலக வாழ்க்கையில் மனிதனோடு ஒட்டியிருப்பவை. இந்த பதினெட்டு படிநிலைகளையும் எவன் ஒருவன் தாண்டுகிறானோ, அவனே பகவானின் உண்மை வடிவத்தைக் காண்கிறான். அது மட்டுமல்ல! 18 படிகளும் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதன், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என 18 தெய்வங்களாக விளங்குகின்றன. எனவே, தெய்வத்தன்மை மிகுந்த இந்தப் படிகளில், விரதமிருந்து சுவாமி என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிற, இருமுடி வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறமுடியும்.