உலக அமைதி வேண்டி 63 நாயன் மார்களுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2014 11:12
திருவாரூர்: உலக அமைதி வேண்டியும், தொழில் விரித்தி அடையவும் திருவாரூர் பகுதி யில் 63நாயன் மார்களுக்கு பக்தர்கள் பேரவை சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். உலகில் அமைதி வேண்டியும், பசி,பஞ்சம், நீங்கவும் நாட்டில் வளம் பெருகி, தொழில் வளம் சிறக்கவும், கோவை பேரூர் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கயிலாய மா மணி மெய்கண்டார் வழி,வழி காந்தலிங்க சுவாமிகள் ஆசியுடன் 63 நாயன் மார்கள் பித்தலை சிலைகளை, ஊர், ஊராக கொண்டு சென்று பல்வேறு அபி ஷக ஆதராதனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பக்தர்கள் நாயன்மார்கள் சிலைகளுக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமணப்பொருட்களை கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று காலை திருவாரூர் பழைய நாகை சாலையில் அன்னன் சுவாமிகள் பூஜை குழுவின் சார்பில் பாலசுப்ரமணியன், சக்திசெல்வகணபதி உள்ளிட்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.