கண்டாச்சிபுரம்: சித்தாத்தூர் கிராமத்தில் யோகமணிகண்டன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் பழனியாண்டி கோவில் வளாகத்தில் உள்ள, யோக மணிகண்டன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக இரண்டாம் கால பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி யாகம் நடந்தது. காலை 9.45 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கினர். சேவா சங்கத் தலைவர் முருகன் செயலாளர் விஜய ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஏகாம்பரம், சந்திரசேகர சிவாச்சாரியார், ஊராட்சித் தலைவர் தண்டபாணி செய்தனர்.