விழுப்புரம்: கல்பட்டு கிராமத்தில் <உள்ள சனீஸ்வரன் கோவிலில் வரும் 16ம் தேதி சனிப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடக்கிறது. விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் 21 அடி உயர சனீஸ்வர பகவான் சிலை அமைந்துள்ளது. இங்கு வரும் 16ம் தேதி, சனிப் பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு ஹோமம் நடக்கிறது. அன்று பிற் பகல் 2:17 மணியளவில் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதையொட்டி, உலக நன்மை வேண்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரமானந்த சரஸ்வதி அவதூத சுவாமிகள் மற்றும் ஓம்ஸ்ரீ ஸ்வயம்பிரகாச அவதூத ஆசிரம டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.