பதிவு செய்த நாள்
12
டிச
2014
11:12
திருப்பூர் : திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு 1,008 சங்காபிஷேக பூஜை நேற்று நடந்தது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், 55வது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று காலை 10.00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு 100 வலம்புரி சங்குகள் உட்பட 1,008 சங்குகளில் புனித நீர் வைத்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் முதன்மை தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் தந்திரிகள், அர்ச்சகர்கள், குருசாமிகள், இப்பூஜையில் ஈடுபட்டனர். சங்குகளில் இருந்த புனித நீரால், ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று (டிச.,12) காலை 10.00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு நவகலச அபிஷேகம் நடக்கிறது; தேன், பால், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், நெய், இளநீர், பன்னீர், தயிர் ஆகிய ஒன்பது வகையான திரவியங்களை பூஜை செய்தபின், ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்; மாலை 6.00 மணிக்கு மஞ்சமாதா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.