ஒருமனதாக விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தாங்கிச் செல்லும் அதி அவசியமான பொருள், இருமுடி. எதற்காக இது? மணிகண்டன் தன் வளர்ப்புத் தாயின் நோய் தீர்க்க, புலிப்பால் கொண்டுவர வனத்துக்குச் சென்றார் அந்த சமயத்தில் அவனது வழிப்பாதை உணவுக்காகவும் பிற÷ தவைகளுக்காகவும் தேவையான பொருட்களை இப்படி முடிச்சாகக் கட்டித்தான் சுமந்து சென்றார். அதனால் அவனது பக்தர்களும் தங்களின் ய õத்திரைத் தேவைகளுக்காகவும் ஐயனை வழிபடவும் தேவையானவற்றை இருமுடிகளாக சுமந்து செல்லும் வழக்கம் வந்தது.