பதிவு செய்த நாள்
12
டிச
2014
04:12
ஐயப்பனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தலையில் வைத்து சுமந்து செல்லும் இருமுடிபையில் மஞ்சள், குங்குமம், நெல்பொரி, அவல், மாளிகைபுரத்தம்மன் சன்னதியில் தீபமிட திரிநூல், வழிப்பாதை கோயில்களுக்கான காணிக்கை, இவற்றோடு நெய்த்தேங்காயும் இடம்பிடிக்கும்.
இருமுடிப்பையின் முன்பக்கத்தில் மஞ்சள்தூள், அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவை இருமுடியின் பின்பக்கப் பையில் வைக்கப்படும். முன்புறம் முடிச்சு, தெய்வத்துக்காகவும் பின் புறமுடிச்சு வழிப்பாதையில் பிரசாதங்கள் தயாரிக்கவும் உரியவை என்பது நியதி.