பதிவு செய்த நாள்
13
டிச
2014
04:12
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திரு நள்ளார் முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.
இதனால் வாரம் சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு, 2 அரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. சனிப்பெயர்ச்சி விழா வரும் 16ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு பிரவேசிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிப்பெயர்ச்சி விழா நாளில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க சனிப்பெயர்ச்சிக்கு முந்தைய சனிக்கிழமையான நேற்று திருநள்ளாரில் அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. இதில் காலை முதல் மாலை வரை 3 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக நளம் குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு சனிபகவானை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கீழவீதி, மேற்கு வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வாகனங்கள் ஓ.என்.ஜி.சி.,காலணி சாலை,திருநள்ளார் வடக்கு உள்வட்டச்சாலை மற்றும் போட்டை, திருநள்ளார் தேவஸ்தான பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டது.
போலீசார் பாதுகாப்பு: சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் பக்தர்களின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனைக்கு பின் கோவி<லுக்கு பக்தர்களை அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் மாவட்ட எஸ். பி.,பழனிவேல் தலைமைøயில் கோவில் மற்றும் நளம்குளம் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சேர்ந்த 300க்கு மேற்பட்ட ÷ பாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.