கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2014 02:12
கள்ளக்குறிச்சி: கார்த்திகை சோமவாரத்தையொட்டி, கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சோமவார சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. அதிகாலையில் நித்ய பூஜைகள் நடத்தியபின் 108 சங்கு, கலசங்களுக்கு பூஜைகள் நடத்தினர். வேத பாராயணம், ஜபம், ருத்ரம் ஆகியவற்றுக்குப்பின் யாகம் தொடங்கினர். சிவகாமி சுந்தரிக்கும், சிதம்பரேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி, 108 சங்காபிஷேகம் செய்தனர். உலக நலன் வேண்டி நடத்தப்பட்ட இப்பூஜைகளை அம்பிகேஸ்வர குருக்கள் செய்து வைத்தார்.