பதிவு செய்த நாள்
16
டிச
2014
02:12
திருத்தணி: புதியதாக விஷ்ணு துர்க்கையம்மன் சிலை, நேற்று பிரதிஷ்டை
செய்யப்பட்டது.திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம், மோட்டூர் பகுதியில், நேற்று, புதியதாக விஷ்ணு துர்க்கையம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 18 கலசங்கள் அமைத்து, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மற்றும் வாஸ்து பூஜை நடந்தன. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, புதியதாக அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்
பட்டது.பின், கலச நீர் ஊற்றி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.