பதிவு செய்த நாள்
16
டிச
2014
02:12
திருவள்ளூர்: திருவள்ளூர், பூங்கா நகர் யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், சனிப்பெயர்ச்சி பரிகார மகா யாகம், இன்று நடைபெறுகிறது.
திருவள்ளூர், பூங்கா நகரில், யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், ஞான மங்கள சனீஸ்வர பகவான் சன்னிதி உள்ளது. சனீஸ்வர பகவான் குருவின் நேர் பார்வையில் உள்ளதால், சனீஸ்வரரின் உக்கிரம் குறைந்து, ஆசீர்வாதம் செய்வது போல் கை அமர்த்தி அனுகிரக மூர்த்தியாக விளங்குகிறார். இன்று, சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, காலை 11:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாக பூஜைகள், 108 ஹோம திரவியங்கள் யாகத்தில் சமர்ப்பித்தல் ஆகியன நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், மதியம் 12:30 மணிக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகமும் நடைபெறும். மதியம் 2:17 மணிக்கு, ஞான மங்கள சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெறும்.