பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், நேற்று, சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடந்தன. நேற்று, துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு சனிபகவான் ஆனார்.அதை முன்னிட்டு, பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 11:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், அதன்பின், சகஸ்ரநாம அர்ச்சனைகளும் நடந்தன. பின், மதியம் 2:43 மணிக்கு, சனி பகவான், துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு பிரவேசம் செய்வதையொட்டி, மகா தீபாராதனை நடந்தது. மேலும், ஒன்பது கும்பங்கள் வைத்து சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.