Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி வழிபாடு! ஐயப்பன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை! ஐயப்பன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவில் தேருக்கு புதிய சக்கரங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 டிச
2014
12:12

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தேருக்கு, 2.60 லட்சம் ரூபாய் மதிப்பில், நேற்றுபுதிதாக சக்கரங்கள் மாற்றப்பட்டன.

காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான, தேரோட்டத்தின்போது, தேரின் முன் சக்கரம் உடைந்தது. பின், தற்காலிகமாக அமைக்கப்பட்ட சக்கரம் கொண்டு, தேர் நிலை நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடைபெறும் பிரம்மோற்சவத்தின் தேரோட்டம், சிறப்பாக நடைபெற, புதிய சக்கரங்கள் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 2.60 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு புதிய சக்கரங்கள் பொருத்த, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், திருச்சி பெல் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. மூன்றரை டன் எடை கொண்ட, இரண்டு அச்சு மற்றும் நான்கு சக்கரங்கள், இரண்டு நாட்களுக்கு முன், திருச்சியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, நேற்று ராட்சத கிரேன் மூலம், தேரின் பழைய சக்கரங்கள் அகற்றப்பட்டு, புதிய நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. கோவில் பிரம்மோற்வம், அடுத்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar