செஞ்சி: செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்தனர். சனி பகவான் துலா ராசியில் இருந்து விருட்சிக ராசிக்கு மாறிய 2.43 மணிக்கு மகா தீபாராதனையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. பரிகார ராசி தாரர்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார்.