திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தன.
திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள, சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக, சிறப்பு ஹோமமும் நடத்தப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அரக்கோணம் தாலுகாவில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.