பதிவு செய்த நாள்
20
டிச
2014
12:12
திருப்பூர்:கொண்டத்து வீரபத்ர காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நாளை மறுநாள் நடைபெற உள்ளது.திருப்பூர் மேட்டுப்பாளையம், ராமையா காலனியில் உள்ள கொண்டத்து வீரபத்ர காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த 15ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மறுநாள் சிறப்பு ஹோமம், அம்மனுக்கு திருநீர் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சந்தனக்காப்பு அலங்காரம், சிறப்பு பூஜை முடிந்த நிலையில், நேற்று புஷ்ப அலங்கார பூஜை நடந்தது.இன்று, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைப்பு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று மாலை குத்துவிளக்கு பூஜை, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (21ல்) மாலை, முரசன் சாமிக்கு மாலை அணிவித்து, 50 அடி உயர வீரபத்ர காளியம்மனுக்கு கனி மற்றும் பூ மாலை அணிவிக்கப்படும். வரும் 22, காலை 6:00 மணிக்கு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கும். அதன்பின் அன்னதானம், உச்சிகால பொங்கல் பூஜை நடக்கிறது. 24 வரை, சிறப்பு பூஜை நடைபெற உள்ளன.