பதிவு செய்த நாள்
23
டிச
2014
11:12
திருவள்ளூர்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருவள்ளூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில், காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். தேவி மீனாட்சி நகர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், காலையில், மூலவர் திருமஞ்சனமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. மாலையில், லட்சார்ச்சனை துவங்கியது. லட்சார்ச்சனை 25ம் தேதி வரை நடக்கிறது. தினசரி மூலமந்திர ஜெபம், மாலா மந்திர ஜெபம் நடக்கிறது. வரும் 26ம் தேதி காலை 7:00 மணியளவில், பஞ்சசூக்த ஹோமம் நடக்கிறது. சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில், வடைமாலை சாற்றியும், வெண்ணெய் காப்பும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டனர்.