Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐம்பொன் சிலைகள் நாகையில் ... திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்! திருச்செந்தூரில் வைகாசி விசாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம்: கந்தனின் கடைக்கண் உந்தணின் பக்கம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2011
10:06

செல்லப்பிள்ளை பழநி அப்பன்: போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு "சித்தன்வாழ்வு என்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் "பழநியாண்டி என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாகவே தலவரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால் ராஜாங்க அலங்காரத்தில் பட்டுபீதாம்பரதாரியாக கிரீடத்துடன் ராஜாவாக வழிபாடு செய்வதையே விரும்புகின்றனர். பழநியப்பன் முருகபக்தர்களின் செல்லப்பிள்ளை ஆயிற்றே!மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரவுபகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆனால், மனம் ஒருபோதும் தடுமாறக்கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனாக முருகன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று தலபுராணம் கூறுகிறது. ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம் இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார். அதனால் தான் பழநி சென்று வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். வைகாசி விசாக நன்னாளில் ஞான பண்டிதனைச் சரணடைந்து இந்த பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.

விசாகத்திருவிழா நடத்துவது ஏன்?வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம் என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி என்றால் "பட்சி (மயில்), "சாகன் என்றால் "சஞ்சரிப்பவன் மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன் என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.

ஐந்து தொழில் புரியும் ஆறுமுகன்: காஷ்யபர், கபிலர், துர்வாசர் ஆகிய முனிவர்களிடையே பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களில் யார் சிறந்த கடவுள் என்று அறிவதென ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு வேண்டி முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தனர். தானே ஆதிபரம்பொருள் என்பதையும், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களையும் தானே முன்னின்று நடத்துவதையும் அவர்களுக்கு உணர்த்தினார். இப்பெருமானே இலஞ்சி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு வரதராஜகுமாரன் என்று பெயர். மூன்று முனிவர்களுக்கும் முருகன் அருளிய நிகழ்ச்சியின் அடிப்படையில் ஐப்பசி மாத சஷ்டி விழாவின் போது முதல்நாள் படைக்கும் தொழில் புரியும் பிரம்மனாகவும், இரண்டாம் நாள் காக்கும் தொழில் புரியும் விஷ்ணுவாகவும், மூன்றாம் நாள் அழித்தல் தொழில் புரியும் ருத்ரனாகவும், நான்காம் நாள் மறைத்தல் தொழில் புரியும் மகேஸ்வரனாகவும், ஐந்தாம் நாள் அருளல் தொழில்புரியும் சதாசிவமாகவும் வந்து தரிசனம் தருகிறார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே இலஞ்சி அமைந்துள்ளது. "இலஞ்சி என்றால் நீர்நிலை, அருள், செல்வம் என்று பொருள்கள் உண்டு. நீரினைப் போல குளிர்ச்சியாக அடியவர் வேண்டிய வரங்களை அருள் வழங்கும் கலியுக வரதனாக முருகப்பெருமான் இலஞ்சியில் வீற்றிருக்கிறார்.

மலையாய் இருக்கும் மந்திரம்:முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து கடலிலே திருச்செந்தூரிலும், நிலத்திலே திருப்பரங்குன்றத்திலும், வானத்திலே திருப்போரூரிலும் போர் புரிந்தார். இதில், போரின் பெயரால் போரூர் என்ற பெயர் ஏற்பட்டது. பழங்காலத்தில் இத்தலம் சமராபுரி, யுத்தபுரி என்று அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் 42 கி.மீ., தொலைவில் உள்ளது இவ்வூர். சிவபெருமான் கைலாசநாதராகவும், அம்பாள் பாலாம்பிகை என்ற பெயரிலும் இங்கு வீற்றிருக்கின்றனர். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் அழிந்துவிட்டது. பதினேழாம் நூற்றாண்டில் பனங்காடாக இருந்த திருப்போரூர் பகுதிக்கு வந்த சிதம்பர சுவாமிகள், முருகப்பெருமான் ஒரு புற்றில் புதைந்திருப்பதைக் கண்டார். அவ்விடத்தில் இந்தக் கோயிலைக் கட்டினார். சிவபெருமான் மடியில் முருகப்பெருமான் அமர்ந்திருக்க, குழந்தை முருகனிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் கோலத்தில் உள்ள செப்புச்சிலை இக்கோயிலில் இருப்பது சிறப்பானது. இத்தகைய சிலையை பிறகோயில்களில் பார்க்க முடியாது. வலது காலை மயில் மீது ஊன்றி வில்லேந்திய நிலையில் காட்சி தரும் சம்ஹார மூர்த்தி என்னும் அபூர்வ சிற்பமும் இங்கு உள்ளது. இங்கு வள்ளையார் ஓடை என்னும் சரவணப் பொய்கையும், பிரணவாமிர்தம் என்னும் தீர்த்தமும் உள்ளன. முருகப்பெருமானை வழிபாடு செய்ய வந்த ஓம் என்னும் பிரணவ மந்திரமே இங்கு மலையாக இருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

முருகனுக்கு வித்தியாசமான பெயர்:திருவண்ணாமலையில் பிறந்த அருளாளர் அருணகிரிநாதர். இவர் இளமையில் பெண் இன்பத்தில் நாட்டம் கொண்டு ஆரோக்கியம் இழந்து வருந்தினார். தற்கொலை செய்யும் நோக்கத்தில் திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறிக்குதித்தார். முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றி ஆட்கொண்டு அருள்செய்தார். அருணகிரி நாதருக்கு அருள்புரிந்த முருகன், "கம்பத்து இளையனார் என்ற வித்தியாசமான பெயரில் திருவண்ணாமலையில் காட்சி தருகிறார். இவர் முருகன் மீது பாடிய பாடல்கள் "திருப்புகழ் என்று போற்றப்படுகின்றன. இதில் 1307 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.

கருணைக்கு அருணகிரி:வில்லிபுத்தூரார் என்ற திறமை மிக்க புலவர் மற்ற புலவர்களிடம் வாதத்தில் ஈடுபடுவார். வாதத்தில் தோற்றவரின் காதைக் குறடால் அறுத்துவிடுவது இவரது வழக்கம். ஒருமுறை, இவர் அருணகிரிநாதருடன் வாதத்தில் ஈடுபட்டார். அருணகிரிநாதர் "கந்தரந்தாதி என்ற பாடலைப் பாடினார். 54வது பாடலில், "திதத்த என்று தொடங்கும் பாடலுக்கு உரை சொல்லுமாறு வில்லிபுத்தூராரிடம் கேட்டார். அவரோ, உரை சொல்லமுடியாமல் தடுமாறியதுடன் தோல்வியையும் ஒப்புக் கொண்டு காதை நீட்டினார். ஆனால், பெருந்தன்மையுள்ள அருணகிரிநாதர் அவரைத் தண்டிக்கவில்லை. அதனால் "கருணைக்கு அருணகிரி என்ற பழமொழி வழக்கில் உண்டானது.

வைகாசி விசாக வழிபாடு: * மயில் மீது வலம் வருபவனே! வேதத்தின் உட்பொருளாய் திகழ்பவனே! கண்டவர் மனம் கவரும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே! முருகப்பெருமானே! உன்னைச் சரணம்அடைகிறோம்.
* "மலையேறி வந்து என்னைத் தரிசித்தால் வாழ்வின் உச்சியை அடைந்து மகிழ்வாய் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே! ஆறுமுகப்பெருமானே! எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தருள வேண்டும்.
* பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! ஒளிமயமான ஸ்வர்ண மஞ்சத்தில் அமர்ந்து, ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல் அழகுற காட்சி தருபவனே! தேவர்களுக்கு வாழ்வு அளித்த தெய்வமே! கார்த்திகேயனே! உன்னை எப்போதும் எங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்போம்.
* வேடராஜனின் குமரியான வள்ளிநாயகியை மணந்தவனே! இந்திரன் மகள் தெய்வானையின் துணைவனே! தாரகா
சுரனை வதம் செய்த வீரனே! தாமரை போன்ற உன் ஆறுமுகங்களும் புன்சிரிப்பால் மலர்ந்துள்ளன. கண்கள் கருணையைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. சிவகுமரனே! உன் திருவடியைச் சரணடைந்து விட்டோம்.
* இளங்குமரனே! சிவபெருமானுக்கு குருவாய் வந்த குகனே! கந்தப்பெருமானே! சேனாதிபதியே! வெற்றி வேலவனே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! எங்கள் தலைவனே! அசுரனை அழித்தவனே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும்.
* கந்தப்பெருமானே! எங்கள் கண்கள் உன் திருவடிகளை மட்டுமே காணட்டும். காதுகள் உன் திருப்புகழை மட்டும் விருப்பத்தோடு கேட்டு மகிழட்டும். நாக்கு உன் பெருமையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கட்டும். உனக்கு தொண்டு செய்து வாழ்வதே எங்கள் பணியாக அமையட்டும்.
* முருகா! தாயும் நீயே! தந்தையும் நீயே! உன் பிள்ளைகளான எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக. உன்னையன்றி வேறொருவரையும் நாங்கள் அறிந்ததில்லை. பாமரருக்கும் அருள்புரியும் பரம்பொருளே! நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் ஆகிய அனைத்து பேறுகளையும் தந்தருள்வாயாக.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கனுார்; மணலிப்பட்டு செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.திருக்கனுார் அடுத்த ... மேலும்
 
temple news
சென்னை; சென்னையில் முதல் முறையாக, மூன்று நாள் பத்ராசல ராமர் தரிசனம் நடக்க உள்ளது. இந்த நிகழ்வு ‘பக்த பாத ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த கால பைரவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar