செஞ்சி: செஞ்சியை அடுத்த புலிப் பட்டு கருவாட்சி தாங்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி மற்றும் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.9.30 மணிக்கு 108 திரவியங்களை கொண்டு சிறப்பு ஹோமமும், மேளக்கச்சேரியும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் முடிதிருத்துவோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.