Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழகத்தின் காசி! அம்மாவுக்கு ஒரு மனைவி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2014
02:12

மகிழ்ச்சியைப் புதிதாகத் தேட வேண்டியதில்லை. நம் இயல்பான நிலையே மகிழ்ச்சி தான்.   நீ செய்ய வேண்டிய ஒரே பணி உன்னிடமுள்ள மகிழ்ச்சியின்மையை நீக்குவது மட்டுமே. பின்னர் மகிழ்ச்சி தானாக வெளிப்படும். இருதயம் ரத்தத்தை சுத்திகரிக்கும் அங்கம் மட்டுமல்ல. அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அதுவே. ‘இருதயம்’ என்றால் ‘மையம்’ என்று பொருள்.  பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடலோ இருதயத்தில் அடங்கி இருக்கிறது. எனவே, பிரபஞ்சமே இருதயத்தில் அடங்கியுள்ளது.   சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல, இருதயம் மனதிற்கு ஒளியூட்டுவதாக இருக்கிறது.  மூளையைக் கொண்டு கவனம் செலுத்தி பணியாற்றுவதால் சூடு, தலைவலி உண்டாகும். அதனால் இருதயத்தில் கவனம் செலுத்தி பணிபுரிவது நல்லது.  சூழ்நிலை ஒருபோதும் மனிதன் விருப்பம் போல அமைவதில்லை.  அமைதியுடன் வாழ்வதே இயல்பு. ஆனால் பெரும்பாலும் அமைதியின்மையைப் பற்றி மட்டுமே பேச நேரிடுகிறது.  நல்லவர்களோடு பழக வேண்டும். இதனால், மனம் மகிழ்ச்சியில் மூழ்கி எப்போதும் புத்துணர்ச்சியுடன் வாழ முடியும்.   எண்ணங்களின் தொகுப்பே மனம். தேடிக் கண்டுபிடித்தால் மனம் என்ற ஒரு பொருள் தனியாக இல்லை என்பது தெரிய வரும்.  எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணமும் எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கவே செய்யும்.   எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்ற மனமே வலிமையானது. ஞானவழியில் மனம் செல்லுமானால் உலகமே கடவுள் மயமாகத் தெரியும்.  அலை பாயும் மனம் எண்ணத்தால் சிதறிப் போய் பலவீனம் பெறுகிறது. மனம் ஒரே எண்ணத்தில் குவியுமானால் அதன் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.  மனிதன் தன்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை. உலக விஷயத்தைப் பற்றி அறிவதிலேயே நாட்டம் கொள்கிறான்.  நீ நீயாகவே எப்போதும் இரு. இழக்க வேண்டியது அகந்தை மட்டுமே. இருப்பது எப்போதும் உன்னிடமே இருக்கும்.  அகந்தையின் வலையில் விழுந்து விடாதே. அதனால் ஆரவாரம் மிக்க வெற்றுப் பேச்சை விட்டு விடு.  மூச்சைக் கட்டுப்படுத்தினால் மனம் அடங்கும். அடங்கிய மனம் கட்டப்பட்ட மிருகம் போல எங்கும் அலையாமல் நிற்கும்.  அருளின் உச்சவடிவம் மவுனம் தான். அதுதான் உயர்ந்தபட்ச உபதேசமாகவும் இருக்கிறது.  நான் யார் என்ற கேள்வியை இடைவிடாது கேட்டுக் கொண்டிரு. பதிலைத் தேடிச் செல். வழி கிடைத்து விடும்.  தனிமனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால் சமுதாயமே திருந்தி விடும். அதனால் மனிதன் சுயமாக தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.  பலம் அற்றவன், தீயவன் என்று ஒரு போதும் உன்னை நினைக்காதே. உலகிலுள்ள ஒவ்வொருவரும் தெய்வீகமானவர்களே. (மகான் ரமணர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar