Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன ... அனுமத் ஜெயந்தி விரதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மாவுக்கு ஒரு மனைவி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2014
02:12

பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.தந்தையின் மனைவியைத் தாயார் என்று அழைக்கலாம். தாயின் மனைவியை என்ன பெயர் சொல்லி அழைப்பது?1554ம் ஆண்டு சிவ அவதாரமாகவே போற்றப்பட்ட ஸ்ரீ அப்பைய தீட்சிதருடன், சோழ தேசத்து மன்னர் நரசிம்மபூபாலன், ஒரு சாஸ்தா கோயிலுக்குப் போனார். அவர்களுடன் கல்வியில் சிறந்த பண்டிதர் ஒருவரும் உடன் சென்றார். அனைவரும் கோயிலை அடைந்தார்கள். அங்கே சாஸ்தா விக்ரஹம் ஒன்று மூக்கில் விரலை வைத்தபடி இருந்தது. அதைப் பார்த்த அரசர் ஆச்சரியப்பட்டார். அங்கிருந்தவர்களை அழைத்து, ஏன் இப்படி? என்று கேட்டார். அதற்கு, ஞானி ஒருவர் வருவார். அதற்கான காரணத்தை அவர் சொல்லக் கேட்டவுடன் இந்த விக்ரஹம் தன் மூக்கில் இருக்கும் விரலை எடுத்து விடும் என்று பதில் சொன்னார்கள்.அதைக் கேட்ட அரசர் மேலும் ஆச்சரியப் பட்டார். தன்னுடன் வந்த பண்டிதரிடம்,இதற்கான காரணத்தை வைத்து ஒரு கவி பாடுங்கள் என்றார்.பண்டிதர் கர்வத்துடன்,விஷ்ணுவின் பிள்ளை நான். ஏற்கனவே, விஷ்ணுவின் பிள்ளையாக இருக்கும் பிரம்ம தேவருக்குச் சமமான என்னைத் தேவர்கள் எல்லாம் பூஜை செய்வார்கள். என்ன தான் இருந்தாலும், பூத கணங்களுக்குத் தலைவனான சிவனுக்கும் நான் பிள்ளையாக இருக்கிறேன் அல்லவா? அதனால் தான் என்னைச் சுற்றிப் பூதகணங்கள் இருக்க, என்னைப் பூதநாதா என்கிறார்களோ என்னவோ?  என்னும் கருத்து அமைந்த பாடலைப் பாடினார்.ஊஹூம்! விக்ரஹம் அப்படியே தான் இருந்தது. அதன் விரல் அசையவே இல்லை. அடுத்து.....அரசர் தீட்சிதரின் பக்கம் பார்வையைத் திருப்பினார்.சுவாமி! நீங்கள் பாடுங்கள் என்று வேண்டினார்.தீட்சிதர் பாடத் தொடங்கினார்.கவுரியை (பார்வதி)நான் அம்மா என்று கூப்பிடுவேன். அப்பாவின் மனைவிகள் அனைவரும் எனக்கு அம்மா அல்லவா? அதனால் கவுரியை நான் அம்மா என அழைக்கலாம். ஆனால், லட்சுமி தேவியை நான் என்ன பெயர் சொல்லி அழைப்பேன்? விஷ்ணு மோகினியாக வந்தபோது அவருக்கும் சிவனுக்கும் மகனாக நான் பிறந்தேன். அதனால், மோகினியாக வந்த விஷ்ணுவை அம்மா என அழைக்கலாம். ஆனால்...விஷ்ணுவின் மனைவி லட்சுமியைஎன்ன சொல்லி அழைப்பேன்? என்ற கருத்தில் பாடல் பாடினார். இதைக் கேட்டு சாஸ்தா மூக்கில் இருந்த விரல் அகன்றது.அதைக் கண்ட அனைவரும்ஆச்சரியப்பட்டனர். கர்வம் கொண்ட பண்டிதரின் தலை தரையைப் பார்த்தது.அப்பைய தீட்சிதர் கண்ணீர் மல்க சாஸ்தாவை வணங்கினார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar