கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக ஐதிகம். அதனால் மூலவர் சன்னதியில் எப்போதுமே திரை போடப்பட்டுள்ளது. தீபாராதனையின் போது மட்டுமே சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். இக்கோயிலில் விபூதியும், குங்குமமும் கலந்தே வழங்கப்படுகிறது. இங்கு பள்ளியறை கிடையாது.