பதிவு செய்த நாள்
27
டிச
2014
12:12
சேலம்:சேலம் வாழ் நகரத்தார் நோன்பு விழா வழிபாட்டுக்குழு சார்பில், 24ம் ஆண்டு கூட்டு வழிபாடு, சாமிநாதபுரம் குவாலிடி திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது.
இதுகுறித்து, குழுவின் தலைவர் லட்சுமணன், விஸ்வநாதன், உதவி செயலாளர் கண்ணன், பொருளாளர் சக்திவடிவேல், கவுரவ ஆலோசகர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கூறியதாவது:இந்த கூட்டு வழிபாட்டு நிகழ்ச்சியில், மதியம், 3 மணியளவில், கோவை ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை முனைவர் ஸ்ரீஜெகநாத சுவாமிகள் அபிராமி அந்தாதி இசை சொற்பொழிவு நடத்துகிறார். மாலை, 5 மணிக்கு சிறுவர்களின் மனமகிழ் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7 மணியளவில், அரிசி, வெல்லம் கலந்த மாவு, நெய் கலந்து பிள்ளையார் பிடித்து, 21 நூல்களால் ஆன திரியில் தீபம் ஏற்றி, மூத்தவர்கள் வழங்க, முதன்மை கடவுள் ஆகிய பிள்ளையார் வழிபாடு நடத்தப்படுகிறது.இதற்காக, கார்த்திகை தீப நாளில் இருந்து, 21 நாட்கள் விரதம் இருந்து, 21 நூல் எடுத்து, இழை தயாரிப்பது வழக்கம். தொழில் நிமித்தமாக, சேலத்தில், 650 குடும்பங்கள் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். 600க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்வர். அனைத்து நகரத்தார்களும், விழாவில் கலந்து கொண்டு, இறையருள் பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.