பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
நகரி: பெருமாள் கோவில்களில், நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ள, கரியமாணிக்க பெரு மாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, நாளை, அதிகாலை 4:30 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக, காலை முதல், இரவு 8:00 மணி வரை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயங்கி வரும் இக்கோவிலில், திரு மலை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு அடுத்தப்படியாக, கடந்த ஆண்டு முதல், சொர்க்கவாசல் திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நகரி நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து, பெருமாளை வழிபடுவர். நகரி டவுனில் உள்ள காமாட்சி சமேத கரக்கண்டேஸ்வரர் சுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. அதே பே? ல், நகரி சுந்தர விநாயகர் கோவில், புதுப்பேட்டை அகரவிநாயகர் கோவில், சத்திரவாடா சிதம்பரேஸ்வரர் கோவில், ஏகாம்பரகுப்பம் மற்றும் ÷ க.வி.ஆர்.பேட்டை பகுதிகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், கீழப்பட்டு சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு ÷ காவில்களிலும், புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.