பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
பெங்களூரு: உலக அமைதி வேண்டி, 18ம் ஆண்டாக, சிவாஜி நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், புத்தாண்டு தினத்தன்று, 24 மணி நேர மகா பூஜை நடக்கிறது. பெங்களூரு, சிவாஜிநகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், புத்தாண்டை முன்னிட்டு, உலக அமைதிக்காக, 108 கலசத்துடன், 24 மணி நேர மகா பூஜை நடப்பது வழக்கம். நடப்பாண்டு, இன்று மாலை, விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. இன்றிரவு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. ஜன., 1ம் தேதி, இரவு 12:01 மணிக்கு தீபாராதனை, நள்ளிரவு 1:00 மணிக்கு, 108 மகா கலச அபிஷேகம் நடக்கிறது. புத்தாண்டு தினத்தன்று காலை, மைசூரு அம்பா பிரசாத் குழுவினரின் வயலின் இசை, மதியம், மரகதவள்ளி குழுவினரின் இசை, ஆனேகல் நாராயணகட்டா சீனிவாசய்யா குழுவினரின் நாதஸ்வரம், மாலையில், நந்தி பரத நாட்டிய கலாசாலை மாணவிகளின் பரதநாட்டியம் இடம் பெறுகிறது.