சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்: 5ம் தேதி உள்ளூர் விடுமுறை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2014 02:12
கடலூர்: சிதம்பரத்தில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசன பெருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனப் பெருவிழா வரும் 5ம் தேதி நடக்கிறது. அன்று விழாவின் முக்கியத்துவம் கருதி அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விடுமுறை நாளான 14ம் தேதி சனிக்கிழமை அன்று அவசர அலு வல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.