திருக்கனுார்: செட்டிப்பட்டு லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாளை (1ம் தேதி) காலை 5:30 மணிக்கு திருப்பாவை சேவை நடக்கிறது.தொடர்ந்து, 9:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 10:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.