பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, பெருமாள் கோவிலில், சகஸ்ர நெய் தீபத் திருவிழா நாளை நடக்கிறது. முத்தியால்பேட்டை, காந்தி வீதியில், தென்கலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 31ம் ஆண்டு, 1008 (சகஸ்ர) நெய் தீபத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (1ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, பெருமாளுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை ஆரம்பிக்கிறது. இதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில், 1008 நெய் தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி வைபவம் என்ற தலைப்பில், தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துகிறார். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீநிவாச பக்த சபா நிர்வாகிகள் செய்துள்ளனர்.