பதிவு செய்த நாள்
01
ஜன
2015
11:01
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திருத்தணி அடுத்த, தலையாரிதாங்கல் பகுதியில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஒரு யாக சாலை, ஐந்து கலசங்கள் அமைத்து கணபதி ஹோமம், தன்வந்திரி பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை 6:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, மூலவர் சாய்பாபாவிற்கு, 100 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணி முதல், இரவு 11:30 மணி வரை, பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. நள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.