ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2015 11:01
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை பரம பத வாசல் திறக்கப்பட்டது. இதற்காக, ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, பல்லக்கில் புறப்பட்டனர். பரம பத வாசலில் ஆழ்வார்கள் காத்து இருக்க , வாசல் திறக்கப்பட்டு, பெரிய பெருமாளுடன் அம்பாள் மற்றும் சுவாமி எழுந்தருளினர். பக்தர்கள் கோவிந்தா, நாராயணா கோஷத்துடன் தரிசித்தனர்.