பதிவு செய்த நாள்
01
ஜன
2015
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கு மிகவும் சிறப்பு பெற்றது. ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். வரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு ரத்தின அங்கி சேவை நடந்தது. அஷ்டபுஜ பெருமாள் கோவில், அழகிய சிங்க பெருமாள் கோவில், விளக்கொளிப் பெருமாள் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், பாண்டவபெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஒவ்வொரு பெருமாள் கோவில்களி்லும், அதிகாலை 3:00 மணி முதலே பக்தர்கள் கூட்டம் குவிய தொடங்கியது. கோவி்ல்களில், நீண்ட நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.